
தமிழகம்
தொடர் கனமழை: வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!
எப்போதும் நம் தமிழகத்திற்கு வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் தான் அதிக அளவு மழைப்பொழிவு கிடைக்கும். இந்த மழை பொழிவானது நவம்பர் மாதத்தில் பெய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது தென்மேற்கு பருவக்காற்று காலத்திலும் நம் தமிழகத்திற்கு இயல்பை விட சற்று அதிகமாக மழை பொழிவு கிடைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 100 சதவீதத்திற்கும் அதிகமாக ஜூன் முதல் நேற்று வரை மழைப்பொழிவு கிடைத்துள்ளதாக கூறியிருந்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியது.
அதுவும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்த தொடர் கனமழையால் பல இடங்களில் அடுத்தடுத்து பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தொடர்மழையால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
