வலிமை படம் எப்படி தயாரிப்பாளர் போனி கபூர் மகளின் பதில்

அஜீத் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கலை ஒட்டி அதற்கு முன்பே அதாவது ஜனவரி 13ம் தேதி போகியன்று வெளியாகிறது.

இந்த திரைப்படம் ஓமிக்ரான் காரணமாக தள்ளிப்போகும் என்ற சூழல் நிலவிய நிலையில் அப்படி எல்லாம் இல்லை வலிமை திட்டமிட்டபடி ஜனவரி 13ல் வெளியாகும் என நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வரும் அஜீத் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை ஹிந்தி படத்தின் ரீமேக். ஆனால் இது ஹெச் வினோத்தின் சொந்த கதை என்பதால் அவரது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படம் ரேஞ்சில் படம் பட்டைய கிளப்பும் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்க்கப்படுகிறது.

இதற்கிடையே  வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூரும் வலிமை என டுவிட் செய்து அதற்கு ஒரு ஹார்ட்டினை விட்டுள்ளார். கண்டிப்பாக அவர் படம் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.

அவர் ஹார்ட்டின் விட்டு டுவிட் செய்துள்ளதால் படம் நன்றாகவே இருக்க வாய்ப்புள்ளது.

https://twitter.com/JanhviKaapoor/status/1478402529838788610?s=20

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment