வலிமை வராது என பரப்பபட்ட வதந்தி- படக்குழு விளக்கம்

அஜீத் நடித்த வலிமை திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. பைக் ரேசிங் அடிப்படையிலேயே பல மயிர்க்கூச்செறியும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

சும்மாவே ஆடுவார்கள் அஜீத் ரசிகர்கள். இதில் சலங்கை கட்டிவிட்டால் ஆடாமல் இருப்பார்களா?

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான டிரெய்லரை பார்த்து விட்டு ரசிகர்கள் படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் யாரோ சிலர் இணையத்தில் படம் பொங்கலுக்கு வெளிவராது என பரப்பி விட்டு விட்டனர்.

இதனை பார்த்த படக்குழு அதிர்ச்சி அடைந்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. திட்டமிட்டபடி ஜனவரி பொங்கலுக்கு வலிமை வெளியாகிறது. ஜனவரி 13ம் தேதியன்றே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment