கொரோனா பரவல் காரணமாக வலிமை பட ரிலீஸ் தள்ளிவைப்பு- ரசிகர்கள் அதிர்ச்சி

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்க வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு முதல் நாள் வெளியாக இருந்தது.

இந்நிலையில் ஓமிக்ரான் பாதிப்பு காரணமாக தியேட்டரிலும் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

இருப்பினும் நேற்று முன் தினம் கூட தயாரிப்பாளர் தரப்பில் வலிமை படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது .

அதன் படி தயாரிப்பாளர் போனி கபூர் கூறி இருப்பதாவது

கொரோனா உலகம் முழுவதும் பரவி வருவதால் இப்பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் நிலைமைகள் சீரான உடன் படம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment