தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை அல்லது இரவு வெளியாகும் என சமூக வலைதளங்களில் தீயாய் ஒரு தகவல் பரவிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கடந்த பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கேட்டு வருகின்றனர். ஆனால் ‘வலிமை’ படக்குழு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்பட்ட.து இதனை அடுத்து தற்போது சமூக வலைதளங்களில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை அல்லது இரவு எந்தவித முன்னறிவிப்புமின்றி வெளியாகும் என்றும் அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகமாகி ‘வலிமை’ குறித்த ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.