அடி தூள்..! வசூலை வாரி குவித்த ’வலிமை’…. இதுவரையில் எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த வலிமை படமான ரசிகர்கள் மத்தியில் பட்டைய கிளப்பியது.

இப்படமானது போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஒரு தரப்பில் பல பாசிட்டிவ் கமன்ட் வந்தாலும் மற்றோரு தரப்பில் நெகட்டிவ் கமன்ட்கள் விமர்சித்து இந்த படம் 100 கோடியை தாண்டுவது கடினம் என சோசியல் மீடியாவில் பல வதந்திகள் வந்தன.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வலிமை படமானது இதுவரையில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வலிமை படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment