வலிமை படத்தில் அஜீத் பயன்படுத்திய கையுறையை ஏலத்தில் எடுத்த ரசிகர்

அஜீத்குமார் வலிமை திரைப்படம் விரைவில் பொங்கலை ஒட்டி வர இருக்கிறது. பொங்கலுக்கு முதல் நாளே வலிமை படத்தை படக்குழு வெளியிட இருக்கிறது.

இந்த நிலையில் வலிமை படத்தில் அஜீத் அதிகமாக மோட்டார் ரேஸ்  காட்சிகளில் சேஸிங்க் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்.

அப்போது அவர் அணிந்திருந்த கையுறை ஒன்றை ரசிகர் ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

நடிகர் அஜித்தின் பெற்றோரான, மோகினி – சுப்ரமணியம் ஆகியோரின் பெயரில் மோகினி மணி எனும் டிரஸ்ட் செயல்படுகிறது இதன் மூலம் நடிகர் அஜித், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி வருகிறார்.

இந்நிலையில்  கைண்ட்னஸ் பவுண்டேஷனுக்காக  நடிகர் அஜித்தின் ஆட்டோகிராப் இட்ட கையுறை பள்ளிக்குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2021 மார்ச் மாதம் ஏலம் விடப்பட்டது.

இந்த ஆட்டோகிராப் இட்ட கையுறையை, நடிகர் அஜித்தின் ரசிகர் பெங்களூரைச் சாந்த சூர்யா என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார். இது போன்ற கை உறையைத்தான் அஜீத் வலிமை படத்தில் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment