வாளையார் மனோஜின் ஜாமினை ரத்து செய்ய கோரி மனு; மாலையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவிப்பு!

வாளையார் மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதன்படி கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உதகை நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு அளித்துள்ளனர். வழக்கு விசாரணை முடியும் வரை உதகையில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மனோஜ் மீறியதாகவும் காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர்.

வாளையார் மனோஜ் அண்மையில் கேரளா சென்றுவிட்டு திரும்பியதாகவும் காவல்துறையினர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். வாளையார் மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீது மாலையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்துள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 150 பேரிடம் தனிப்படை விசாரணை நடத்தியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கோடநாடு  வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment