வளர்பிறையில் திருவிழாக்கள் சுப விசேசங்களை செய்வது ஏன்?! – அறிவோம் அர்த்தங்கள்!!

திருவிழாக்கள், காதுகுத்து, திருமணம், சீமந்தம் மாதிரியான சுப விசேஷங்களை வளர்பிறையில் செய்வது வழக்கம். அவ்வாறு செய்வதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?!

0075f782cc1034d8011e843fdadc3172-1

இன்றுபோல அந்த காலத்தில் மின்சார, போக்குவரத்து வசதி கிடையாது. திருவிழாக்களுக்கும், சுபவிசேசத்துக்காக இன்னொரு ஊருக்கு போவோர் நெடுந்தூரம் நடந்து செல்லவேண்டும். பகலில் சுலபமாய் நடந்துடலாம். ஆனால், இரவில், வெளியூரில் தீப்பந்தம் கிடைக்குமா?! நிலவொளியின் துணையோடுதான் நடக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், திருவிழாக்கள், திருமண மதிரியான நிகழ்ச்சியில் வெளிச்சத்திற்கு என்ன செய்வது?! எத்தனை தீப்பந்தம் ஏற்றி வைப்பது. ஏற்றிய தீப்பந்தம் காற்றில் மழையில் அணைந்துவிட்டால்?!

அதனால்தா நிலாவின் வளர்பிறை ஆரம்பிக்கும்போது நிலா ஒளியின் பிரகாசம் அதிகமாக இருக்கும் அல்லவா ? அந்த நாட்களில் விழாக்களை வைக்கும்போது ஒளி தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. அதனால் பண்டைய மக்கள் வளர்பிறை நாட்களுக்காக காத்திருந்து விழாக்களை கொண்டாடினார்கள். அதை இன்றைய காலத்தில் மக்கள் மூடநம்பிக்கையாக நினைத்து ஒரு பொருளை எடுத்து வேறு இடத்தில் வைக்கவும் வளர்பிறை நாட்களுக்காக காத்திருக்கின்றனர். தேடுகின்றனர். நம் பண்டிகைகள் பெரும்பால்லும் பௌர்ணமி தினத்திலோ அல்லது அதற்கு முன்பின்னான ஓரிரண்டு நாட்களிலோ கொண்டாடப்பட்டதன் காரணம் இதுதான்.

அதனால், முன்னோர்கள் செய்துட்டாங்களே என எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆராய்ந்து உண்மையை கண்டறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print