வலம்புரி சங்கால் வரும் பலன்கள் பயன்கள்

வலம்புரி சங்கு என்பது தெய்வீகமானது. வலம்புரி சங்கால் இறைவனுக்கு பூஜை செய்வது நல்லது என்று நம்பப்படுகிறது. வலம்புரி சங்கில் நீர் எடுத்து அபிசேகம் செய்யலாம். பெரும்பாலும் வலம்புரி சங்கை போலியாகவே விற்பனை செய்கிறார்கள்.

இறைஸ்தலங்கள் பலவற்றில் வலம்புரி சங்கு விற்பனை செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் போன்ற கடற்கரை சார்ந்த புகழ்பெற்ற கோவில்களில் வலம்புரி சங்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் போலிகளும் அதிகம் நல்ல சங்குதானா என்பதை நன்கு ஆராய்ந்து அறிந்துதான் வாங்க வேண்டும்.

வலம்புரி சங்கு என்பது சாதாரண 300 ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாய் வரை இருக்கிறது என்பதுதான் சங்குவை கடலில் இருந்து எடுத்து அதை சுத்தமாக்கி வியாபாரம் செய்யும் பெரிய வியாபாரிகள் சொல்லும் விசயம். அரிதிலும் அரிதாய்தான் மிக விலை உயர்ந்த சங்கு கிடைக்கப்பெறுகிறது. கடைகளில் விற்பனைக்கு வரும் சங்கு நாம் வாங்க கூடிய கணிசமான விலையிலேயே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது மகாலட்சுமிக்கு ஈடானது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றியவளே எனவேதான் வலம்புரிச் சங்கு “லக்ஷ்மி சகோதராய” என்று அழைக்கப் படுகிறது. ஸ்ரீ மஹாவிஷ்ணு வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை தனது மார்பிலும் தாங்கியபடி காட்சி அளிக்கிறார்.

வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பதும் கோவிலில் பூஜை செய்வதும் மிக அருமையான முன்னேற்றங்களையும் செல்வ வளத்தையும் தரும்.

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமையான சோமவாரத்தில் 108 சங்கு வைத்து பூஜை செய்வார்கள் அதில் வலம்புரி சங்குதான் நடுநாயகமாக இடம்பெறும்.
வலம்புரி சங்கில் பூஜை செய்தால் தோஷங்கள் இருப்பின் அகன்று விடும். வலம்புரி சங்கை வாங்கும்போது நன்கு தெரிந்த ஆன்மிக பெரியவர்களை வைத்துதான் வாங்க வேண்டும் ஏனென்றால் பெரும்பாலான கடைகளில் சரியான வலம்புரி சங்கை விற்பனை செய்யாமல் ஏமாற்றபடுகிறார்கள்.
வலம்புரி சங்கு வாழ்வில் இன்பம் சேர்க்கிறது என்றால் மிகையாகாது.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews