காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வெளியானது வலிமை அப்டேட்! லட்சக்கணக்கில் லைக்ஸை குவிக்கும் மேக்கிங் வீடியோ!!

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு தல என்ற அடைமொழியும் உள்ளது. ஆனால் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு கூறியுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வலிமை படத்திற்காக ரசிகர்கள் ஓராண்டுக்கு மேலாக காத்துள்ளனர்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வலிமை திரைப்படத்தினை இயக்குனர் வினோத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வலிமை மேக்கிங் வீடியோவில் தல அஜித் செய்யும் பைக் ஸ்டண்ட் பார்ப்போரை மனம் பதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று கொண்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment