கடும் விஷக்கடிகளை குணப்படுத்தும் வாழை தோட்டத்து அய்யன்

கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ளது வாழை தோட்டத்து அய்யன் கோவில். இவ்வூரில் சின்னையன் என்ற இயற்பெயரை கொண்ட ஒரு மஹான் இருந்திருக்கிறார். இவர் ஆடு மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்த நிலையில் தீவிர ஆன்மிக ஈடுபாடு கொண்டு இருந்திருக்கிறார்.

கற்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி சாமி கும்பிடுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது. இவரின் பக்தி உணர்வை கண்டு இறைவன் ஒரு பெரியவர் வடிவில் வந்து விஷ கடிகளை நீக்கும் அரிய மந்திரங்களை உபதேசித்து சென்றுள்ளார்.

ஒரு முறை சிவன் பார்வதியோடு இவருக்கு காட்சி கொடுத்துள்ளார். இவர் சிவ தரிசனத்தை பெற்றவுடன் நோய்களை நீக்கும் வல்லமையையும் அரிய சக்திகளையும் பெற்றார்.

பல அரிய விஷகடிகளை தீர்த்து வைத்தார். பல அற்புதங்கள் செய்தார். தனது 72வது வயதில் இவர் மரணம் அடைந்தபோது தனக்கு தெரிந்த தொழிலாளி ஒருவரின் கனவில் சென்று தான் இருந்த இடத்தில் ஒரஇருந்த  சிவலிங்கம் மற்றும் நந்திக்கு இருந்ததாகவும் இருவருக்கு கோவில் கட்டவும் பணித்தார்.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மருத்துவ குணம் கொண்ட இந்த புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பக்தர்கள் பூச்சிகடிகள் மற்றும் விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

இந்த லிங்கத்தை சுற்றி பின்னாளில் புற்று ஒன்று வளர்ந்திருக்கிறது. இந்த புற்று மண் பாம்பு விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

ராகு கேதுக்களுக்குரிய சிறந்த பரிகார ஸ்தலமாக இக்கோவில் பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print