பொன்விழா கண்ட வைரமுத்து: வைரமுத்து இலக்கியம் 50-இலட்சினை வெளியீடு!
ஒரு அருமையான கவிதை வெளியாவதற்கு கவிஞர் பாடுபட வேண்டும். அந்த கவிஞனின் சிந்தனைதான் கவிதையாக வெளியாகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிஞராக எல்லாராலும் அறியப் படுகிறார் கவிஞர் வைரமுத்து.
இவர் இலக்கியப் பணி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது. இதனால் கவிஞர் வைரமுத்துவின் இலக்கிய பொன்விழா இந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வாக வைரமுத்து இலக்கியம் 50 என்ற இலட்சியனை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
1972ஆம் ஆண்டு வெளியான வைகறை மேகங்கள், கவிஞர் வைரமுத்துவின் முதல் கவிதை நூலாகும். 50 ஆண்டுகளில் 38 நூல்களையும், 7,500 திரைப் பாடல்களையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைரமுத்துவின் தமிழாற்றுப்படை மூன்று மாதங்களில் 10 பதிப்புகள் கண்டு தமிழ் பதிப்புலகில் சாதனை புரிந்துள்ளது. திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையையும் வைரமுத்து பெற்றுள்ளார்.
சாகித்திய அகாடமி விருது பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம், 23 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட உயர்ந்த விருதுகளையும், 3 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
