Entertainment
போய் வாருங்கள் பிரணாப்! இந்தியா உங்களை நீண்டகாலம் நினைக்கும்: வைரமுத்து

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் சற்று முன் காலமானார் என்பதும், அவரது மகன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் மேலும் சில நோய்களால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை காலமானார். இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.
உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.
பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.
போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை
நீண்டகாலம் நினைக்கும்.
பிரணாப் , வைரமுத்து, டுவிட், கவிதை,
#
