Connect with us

கொரோனாவில் இருந்து பாதுகாக்க மூன்று தீர்வுகளை கூறிய வைரமுத்து!

Entertainment

கொரோனாவில் இருந்து பாதுகாக்க மூன்று தீர்வுகளை கூறிய வைரமுத்து!

702294eb46dabb181676e4d8a1e34c20

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து மனித இனம் தப்பிக்க மூன்று வழிகள் இருப்பதாக கவியரசு வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

மூன்றே தீர்வுகள்;
கொரோனா கொல்லுயிரி
தானே அழிவுறுதல்
அல்லது
வருமுன் காக்கவும் வந்தபின்
போக்கவும் மருந்தறிதல்
அல்லது
மழைத்துளிகளின் இடுக்கில்
நனையாமற் பறக்கும் கொசுவைப்போலக்
கொல்லுயிரிக்குச் சிக்காமல்
வாழ்முறை வகுத்தல்.
நான் அறிவியலை நம்புகிறேன்

மேலும் இந்த மூன்று வழிகளில் ஒன்றை அனைவரும் பின்பற்றினால் கொரோனாவில் இருந்து விடுபடலாம் என்றும் ‘நான் அறிவியலை நம்புகிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது கொரோனா வைரஸை அழிக்க விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து அவர்களின் இந்த கவிதை வடிவ டுவிட்டுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

வைரமுத்து அவர்களின் முதல் வழியான தானே அழிவுறுதல் என்பது நடக்க வாய்ப்பில்லை என்றும், அதேபோல் கொல்லுயிரிடம் சிக்காமல் வாழ்முறை வகுத்தல் என்பதும் மிகவும் கஷ்டம் என்றும், மருந்து கண்டுபிடிப்பது ஒன்றே நிரந்தர தீர்வு என்றும் நெட்டிசன்கள் வைரமுத்துவின் இந்த டுவீட் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top