இவங்க மூன்று பேர்களுக்கும் பால்கே விருது தாருங்கள்: வைரமுத்து வேண்டுகோள்

தமிழ் திரை உலகின் ஜாம்பவான்களான கமல்ஹாசன், இளையராஜா மற்றும் பாரதிராஜா ஆகிய மூவருக்கும் தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என வைரமுத்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று தாதாசாகேப் பால்கே விருது அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், கவர்னர் உள்பட பல பிரபலங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அதேநேரத்தில் கமல்ஹாசன் இளையராஜா பாரதிராஜா ஆகிய மூவரும் தாதா சாகேப் விருது பெற தகுதியானவர்கள் என்பதை மத்திய அரசுக்கு நினைவுபடுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அவருடைய டுவிட் இதோ

பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment