திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையை பெரும்பாலும் கொண்டவர் என்பதும் குறிப்பாக இந்து மதக் கடவுளை அவர் அவ்வப்போது கேலியும் கிண்டலும் செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் இந்துக்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் முருகனின் வேலை கையில் வைத்துக்கொண்டு கொடுத்த போஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிடத்தக்கது
ஓட்டுக்காக தனது நாத்திக கொள்கையை ஓரமாக வைத்துவிட்டு வேலை கையில் பிடித்துள்ளார் ஸ்டாலின் என பாஜக பிரமுகர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் விமர்சனம் செய்துள்ளனர்
இந்த நிலையில் வேல் குறித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
வேல் என்பது கடவுளின்
கைப்பொருள் மட்டுமில்லை
இரும்புக் காலத்தில்
மனிதன் கண்டறிந்த
வேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல்
தமிழர்களின்
ஆதி ஆயுதம் வேல்
அது வேட்டைக்கும் உரியது
வழிபாட்டுக்கும் உரியது
போருக்கும் உரியது
மற்றும்
யாருக்கும் உரியது