ஓமிக்ரான் பரவல் காரணமாக வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்புக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை!

தமிழக அரசு ஓமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் கோவில்களை அடைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நாட்களில் மக்கள் அதிகம் கூடுவதால் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கோவில் நடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த வாரமும் பொங்கல் பண்டிகை என்றாலும் 3 நாட்களுக்கு பக்தர்கள் கோவில் சென்று தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது . பெருமாளுக்கு உகந்த தினமான இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட தமிழ்கத்தின் முக்கிய கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்ற போதிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதிகாலையிலே நடந்த இந்த விழாவிற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாதது வருத்தமளிப்பதாக உள்ளது என இங்கு வந்து திரும்பி சென்ற பக்தர்கள் கூறி சென்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.