திடீரென தலைமைச் செயலகம் விரைந்த வைகோ, திருமா, வேல்முருகன்… முதல்வருடன் கூட்டாக சந்திப்பு!

இலங்கைக்கு மக்களுக்கு அனுப்பக்கூடிய நிவாரண பொருட்கள் தமிழர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், நிவாரண பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க நாடாளுமன்ற குழு அனுப்பவும் ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும் முதலமைச்சரை  வைகோ, திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

இலங்கைக்கு வழங்கப்படும் நிதி மற்றும் பொருளுதவி அங்குள்ள த‌மிழ‌ர்களு‌க்கு முறையாக போய் சேருவதை உறுதி செய்ய இந்தியா, இலங்கை மற்றும் செஞ் சிலுவை சங்கம் சார்பில் குழு அமைத்து கண்காணிப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா , தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர்கள்: தற்போது அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் உள்ள தமிழர்களின் துயரை துடைக்க கூடிய வகையிலும், இலங்கையில் உள்ள மக்களின் துயரை துடைக்கக் கூடிய வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 177 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கும் நிலையில் இத்தகைய பொருட்களை அங்கு விநியோகம் செய்வதை கண்காணிக்க தமிழக அதிகாரிகள் செல்ல இருப்பதாக தெரிவித்தார்

இலங்கை தமிழர்களின் துயரை துடைக்க தமிழக முதலமைச்சர் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதுதான் பெருமூச்சு விடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் இதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் ஒன்றிய அரசின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment