தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதால் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி பிடித்து செல்லப்படுகிறார்கள்.
இவர்கள் அவ்வளவு சீக்கிரமாக விடுவிக்கப்படுவதில்லை மத்திய அரசும் இதில் விரைந்து தலையிட்டு நடவடிக்கை எடுப்பதில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவும் தனது கடும் கண்டனத்தை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
குஜராத் மீனவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் மோடி துடிக்கிறார் விரைந்து நடவடிக்கை எடுக்கிறார். தமிழ் மீனவர்களுக்கு ஒன்று என்றால் கண்டுகொள்வதில்லை.
பாஜக அரசுக்கு எதிரான வலுவான பெரிய அணியை ஏற்படுத்த வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.