எம்ஜிஆர்-சிவாஜியுடன் ஈபிஎஸ்-ஓபிஎஸ்-ஐ ஒப்பிட்ட வைகை செல்வன்!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் எம்ஜிஆர் சிவாஜிக்கு இணையாக ஒப்பிட்டு அதிமுக பிரமுகர் வைகைச்செல்வன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக தற்போது ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியாகவும் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த இரண்டு அணிகளும் சமீபத்தில் மாவட்ட செயலாளர் கூட்டத்தைக் கூட்டினார்கள் என்பதும் இருவருமே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ops epsஇந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணி தான் உண்மையான அதிமுக என பாஜக ஏற்றுக் கொண்டதாகவும் அவரது தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இணைய போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஓ பன்னீர்செல்வம் நிலைமை பரிதாபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் திரைப்படங்களோடு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு அதிமுக பிரமுகர் வைகைச்செல்வன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

திரு.ஓ.பி.எஸ். நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடிகர் திலகம் சிவாஜி படத்தைப் போல நடிப்பை ரசிப்பார்கள் ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடாது.
திரு.ஈ.பி.எஸ். நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தைப் போல படத்தையும் ரசிப்பார்கள் நூறு நாட்களும் ஓடும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.