#Alert மக்களே உஷார்; இந்த 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வைகை நீர்ப்பிடிப்பு பகுதியான ஆண்டிபட்டி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கும் நீர்வரத்து விநாடிக்கு 4000 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியாக உயர்ந்ததையடுத்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 68.5 அடியாக உயர்ந்தவுடன் இரண்டாம் வெள்ள அபாய எச்சரிக்கையும் , 69 அடியாக உயர்ந்தவுடன் மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். 71 அடி உயர்ந்தவுடன் அணை திறக்கப்படுவது வழக்கமாகும்.

அப்போது அணைக்கு வரும் உபரிநீர் முழுவதுமாக வெளியேற்றப்படும் . தற்போது நீர்வரத்து விநாடிக்கு 1947 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் விநாடிக்கு 69 கனஅடியாக உள்ளது. நீர் இருப்பு 4854 மில்லியன் கனஅடியாக உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது இரவு 10 மணிக்கு 66 அடியை எட்டியதையடுத்து முதற்கட்டமாக தேனி, திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களில் ஆற்று கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ கடக்கவோ வேண்டாம் என்றும் நீர்வளத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.