தமிழ் சினிமாவில் காமெடி கிங் வடிவேலு என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் வடிவேலுவுக்கு முன்பே சினிமாவிற்கு வந்த பல காமெடியன்கள் தற்போது அடிமட்டத்திலேயே உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் லொள்ளு சபா மூலம் பிரபலமான நடிகர் சுவாமிநாதன்.
இவர் வடிவேலுவிற்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். இது பலருக்கும் தெரியாது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு குறித்து பேட்டி ஒன்றில் சுவாமிநாதன் பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “ராஜ்கிரண் சார் ஆபீஸ்ல ஆபீஸ் பாயா இருந்தப்போ தான் வடிவேலுவ பார்த்தேன். அப்போ தலைவா ஏதாவது சான்ஸ் இருந்தா சொல்லுங்க தலைவான்னு கேட்பாரு.
அதுக்கப்புறம் சிங்காரவேலன் படத்துல வடிவேலு நடிச்சாரு. நான் அந்த படத்துல ஒரு போலீஸ் கேரக்டர் பண்ணிருப்பேன். அப்போலாம் கார்ல போகும்போது, நீ பின்னாடி ஜம்முன்னு உக்காரு தலைவா நான் ட்ரைவரோட ஒண்டி உக்காந்துக்குறேன்னு சொல்லுவாரு. அப்படி இருந்த வடிவேலுவ நான் அடுத்ததா ஆறு படத்துலதான் பார்த்தேன். அந்த படத்துல எனக்கு ஒரு சின்ன ரோல்தான்.
அப்போ நான் நடிக்கும்போது இடையிலேயே நிறுத்தி சரியா வரல திரும்ப பண்றீங்களானு வடிவேலு ஓயாம சொல்லிட்டே இருந்தாரு. உடனே நான் சார் உங்களோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை நான் ரொம்ப மதிக்குறேன். இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம்னு சொல்லுங்க மாத்திக்கிறேன். அதுக்காக சும்மா சரியா வரல சரியா வரலன்னு சொல்லிகிட்டே இருக்காதீங்கன்னு சொன்னேன்.
வடிவேலுனு இல்ல பொதுவா எல்லா சீனியர் நடிகர்களுமே யாரையும் வளர விட மாட்டாங்க. கவுண்டமணி இருக்கும்போது நிறைய பேர் கஷ்டப்பட்டிருக்காங்க. ஆனா செந்தில், விவேக் சார் அப்படி பண்ணமாட்டாங்க” என கூறியுள்ளார்.