மாரி செல்வராஜ் உடன் முதன் முறையாக கூட்டணி வைத்த வடிவேலு!

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் தான் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ஒரு சிறந்த இயக்குனர் என்ற பெயர் பெற்ற மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கிய கர்ணன் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பல விருதுகளையும் வென்றது.

இதனால் மாரி செல்வராஜ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. தற்போது இவரின் அடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மாரி செல்வராஜ் தற்போது இரண்டு படங்களை இயக்க உள்ளார். அந்த படங்களில் துருவ் விக்ரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நாயகர்களாக நடிக்க உள்ளனர்.

கமல் கதையில் நடிக்கும் விக்ரம்! வேற லெவல் கூட்டணி!!

இதில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் அவரது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையில் தான் உதயநிதி படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார்.

அஜித்துக்கு சிவா என்றால் விஜய்க்கு அட்லி! நான்காவது முறையாக இணையும் காம்போ!!

மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி முதல் முறையாக இணையும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்காக தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலுக்காக எழுதிய கதையில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்!

இதுநாள் வரை நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன் என கூறி வந்த வடிவேலு முதல் முறையாக மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வடிவேலுவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அவரை திரையில் பார்க்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.