மீண்டும் வருகிறார் வடிவேலு: ஷங்கருடனான பிரச்சனை முடிந்தது!

b2c8604af3c7bc3a343128240490807e

சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை செய்தது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் தொடங்கப்பட்டது 
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவான இந்த படம் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் படக்குழுவினருடன் வடிவேலுக்கு மோதல் ஏற்பட்டு அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார் 

இதனால் வடிவேலுவிடம் நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் ஷங்கர் பட அதிபர் சங்கத்தில் புகார் அளித்ததாகவும் இதனை அடுத்து வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதிப்பதாகவும் செய்திகள் வெளியானது

இதனால் பல வருடங்களாக வடிவேலு ஒரு சில திரைப்படங்கள் தவிர எந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வடிவேலு மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

இதனை அடுத்து 24ம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.