தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று சந்தித்து ரூபாய் 5 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’கொரோனா வைரஸ்க்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், தமிழக அரசின் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவரும் போட வேண்டும் என முதலமைச்சர் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார் என்றும் அதனால் அனைவரும் தயவு செய்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது தனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் முன்பு போல் மீண்டும் திரையுலகில் நான் விஷயம் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
தற்போது வடிவேலு மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு அந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்ததை அடுத்து திரை உலகில் இருந்து ஒதுக்கப்பட்டார். அதன்பிறகு தற்போதுதான் அவருக்கு மீண்டும் ஒரு சில வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது