Connect with us

வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

0f35882b70162d7b46308556903f1991

பொழுதுபோக்கு

வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

பெரும்பாலும் மக்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தும் நகைச்சுவை நடிகர்கள் என்றால் அனைவருக்கும் விருப்பம்.தமிழ் சினிமாவில் இன்றுவரை நம்பர் 1 ஆக இருக்கும் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு தான்.ஆனால் சில நாட்களாக வடிவேலுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் நடிக்காமல் இருந்தார்.

நடிகர் வடிவேலுவுடன் படங்களில் நடித்த பலரும் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர்.. அதில் ஒருவர் தான் ஆந்திராவை சேர்ந்த நடிகர் வெங்கல்ராவ். சினிமா துறையில் 25 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் “நீ மட்டும்” என்னும் என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.. இவருடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

New Project 4 33

25 ஆண்டுகள் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். வடிவேலுவுக்கு சினிமாவில் நடிக்க தடை போட்டதற்கு பிறகு அவருடன் நடித்த பலருக்கும் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். அதனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா படங்களில் வெங்கல்ராவை பார்க்க முடியவில்லை.

1 47

‘புஷ்பா 2’ அப்டேட் ! தள்ளி போகும் படப்பிடிப்பு!

இந்நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ், திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வெங்கல்ராவ், விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என திரையுலகினர் ரசிகர்கள் கடவுளை வேண்டி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top