கடந்த வாரம் சென்னையில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தது. அதிலும் குறிப்பாக பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் ஐந்து பேர் கொண்ட முகமுடி கும்பல் கத்தி முனையில் நிதி நிறுவன ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளை அடித்தது.
இது தொடர்பாக முதலில் ஒருவர் கைது செய்யப்பட்டார் மேலும் சக கொள்ளையர்களை போலீசார் தேடிக் கொண்டு வந்தது. அவர்களும் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனால் அந்த ஐந்து பேருக்கும் மூன்று நாள் போலீஸ் காவல் தண்டனை கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை வடபழநி நிறுவன கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு மூன்று நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனி நீதிமன்றத்தில் 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் இவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை வழக்கில் இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.