Connect with us

முழு ஊரடங்கிலும் சிறப்பாக நடைபெற்ற வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா….!

vadapalani

செய்திகள்

முழு ஊரடங்கிலும் சிறப்பாக நடைபெற்ற வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா….!

முழு ஊரடங்கிலும் சிறப்பாக நடைபெற்ற வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா….!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மீண்டும் அமலில் உள்ளது. இதன் விளைவாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் வாரநாட்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் மத வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்றைய தினம் வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று முடிந்துள்ளது. சென்னை வடபழனி முருகன் கோவிலில் திட்டமிட்டபடி குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது.

கொரோனா முழு ஊரடங்கு என்பதால் குடமுழுக்கு விழாவில் கோவில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். வடபழனி முருகன் கோவில் நிர்வாகிகள், 108 சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனர்.

வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா முழுவதும் பக்தர்களுக்காக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. குடமுழுக்கு நடைபெற்ற வடபழனி முருகன் கோவிலில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் சென்னை வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top