புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவில் கும்பாபிசேக தேதி அறிவிப்பு

சென்னை நகரின் முக்கியத்துவம் வாய்ந்த முருகன் கோவில்களில் ஒன்றுதான் வடபழனி முருகன் கோவில். மிகவும் ஜன நெரிசல் நிறைந்த மக்கள் நடமாட்டமுள்ள இந்த முருகன் கோவில் சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்று.

முருகபக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் ஒரு ஒலைக்கொட்டகையில் வசித்து வந்தார். அவர் முருகனின் படத்தை வைத்து வழிபட்டு வந்தார். திருப்போரூர், திருத்தணி முருகன் கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தார். தீராத வயிற்று வலி காரணமாக முருகனுக்கு காணிக்கை செலுத்துகிறேன் ன் நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். இதற்கு “பாவாடம்” என்று பெயர். பாவாடம் காணிக்கையால் அவருடைய வயிற்றுவலி நீங்கப்பெற்றார். மேலும், அவர் நாளடைவில் அந்த இடத்தில் முருகனின் தெய்வீக சக்தியை உணர்ந்தார். அதனால் அவர் பிறரிடம் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் நடந்தேறின.

இதனால் மக்கள் அவரிடம் அருள்வாக்கு கேட்க குவிந்தனர். முருகனின் தெய்வீக சக்தியால் பலருக்கு பலவித பிரச்சினைகள் தீர்ந்தது அவருக்கு பின் அவருடைய சீடர் இரத்தினசாமி செட்டியாரால் பழனியில் உள்ளது போல் சிலை செய்யப்பட்டு இந்த கோவில் கட்டப்ப்பட்டது.

இக்கோவில் 1865ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கோவிலில் இன்றும் திருமணம் செய்ய குவிவோர் எண்ணிக்கை அதிகம்.

இங்கு திருமணம் செய்தால் சீரும் சிறப்புமாக வாழலாம் எந்த என்பது பலரது நம்பிக்கை. அதனால் இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் அதிக அளவிலான கூட்டம் இருக்கும்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் அதிக திருமணங்கள் நடைபெறுவதையொட்டி  இக்கோவிலில் சிறப்பு திருமண கூடங்கள் அதிகம் கட்டப்படும் என கூறியுள்ளார்.

மேலும் இக்கோவிலின் கும்பாபிசேகம் கடந்த 2007ல் நடந்த பிறகு நடக்கவில்லை தற்போது மீண்டும் இக்கோவிலில் கும்பாபிசேக திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் 2022ஜனவரி 23ம் தேதி இக்கோவில் கும்பாபிசேகம் நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.