இன்று தைப்பூசம் – வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் இன்று 151வது ஜோதி தரிசனம் சிறப்பாக நடந்தது!
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர் வள்ளலார் ஸ்வாமிகள். வள்ளலார் எந்த ஒரு சிறு உயிரிடத்தும் அன்பு செலுத்துபவர்.
எந்த ஒரு உயிரையும் கொல்ல விரும்பாதவர். சிறு வயதிலேயே ஞானம் பெற்றவர் இவர்.
வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன் தைப்பூசத்தன்று கண்ணாடியில் முருகப்பெருமானை தரிசனம் செய்தவர்.
மேலும் உலகில் தீராத நோய் பசிப்பிணிதான் அந்த நோய் தீர வேண்டும் எப்போதும் அன்னதானம் செய்ய வேண்டும் என்று மக்களுக்கு போதித்தார்.
இதனால் சத்திய ஞானசபையை நிறுவி அனைவருக்கும் எப்போதும் அன்னதானம் வழங்குவதை நடைமுறையாக்கினார்.
இதனால் இங்கு எப்போதும் அணையா அடுப்பு என்ற அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும்.
இன்று வரையிலும் அணையா அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். இன்று தைப்பூசத்தன்று முருகப்பெருமானை ஜோதி ரூபத்தில் வள்ளலார் கண்ணாடியில் கண்ட நாள் இதனால் இன்று வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
இன்று காலை 6 மணிக்கு நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது.
பின்னர் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது.
