Connect with us

தடுப்பூசி போட்டால் தான் சம்பளம்: கவர்னர் அதிரடி அறிவிப்பு!

News

தடுப்பூசி போட்டால் தான் சம்பளம்: கவர்னர் அதிரடி அறிவிப்பு!

d7cf70aa57a186df622d7abf727a5d18

தடுப்பூசி போட்டால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் அதேபோல் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன

இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுவையிலும் சமீபத்தில் பள்ளி திறக்கப்பட்டது. இருப்பினும் தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத முடியும் என்றும் நுழைவுச் சீட்டு வாங்க முடியும் என்றும் உத்தரவிடப்ப்டும் என அம்மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் 

மேலும் தடுப்பூசி செலுத்துமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவது வருத்தமாக இருந்தாலும் அவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் மேலும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top