Connect with us

தடுப்பூசி போட்டால் தான் சரக்கு: அரசு அதிரடி அறிவிப்பு!

News

தடுப்பூசி போட்டால் தான் சரக்கு: அரசு அதிரடி அறிவிப்பு!

2c38ada28ab2c660fef62382d4818b8c

தடுப்பூசி போட்டால் தான் மதுக்கடைகளில் சரக்கு சப்ளை செய்யப்படும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது குடிமகன்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே வழி என அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைப்புகளும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதால் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

இதில் ஒன்றாக கேரளாவில் இன்று முதல் மதுக்கடைகளுக்கு செல்பவர்கள் தடுப்பூசி போட்டு இருக்கும் சான்றிதழை காண்பித்தால் தான் மது கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ்தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனா நெகட்டிவ்  சான்றிதழ் உள்ளவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆனவர்கள் மட்டுமே மதுபானம் பெற அனுமதிப் படுவார்கள் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top