ஒரே கல்லுல ரெண்டு மாங்கா;; இன்று 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!! 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி!!
இன்றைய தினம் முதல் இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு கட்டமாக இன்று காலையே தடுப்பூசி செலுத்தும் வேலை அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று முதல் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேரடியாக சென்றும் 12 வயது முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி ஐதராபாத்தில் பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
16 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கோர்பேவாக்ஸ் போடப்பட்டு வரும் நிலையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் 25-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட உள்ளது
