12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

நாடு முழுவதும் 12 முதல் 14 வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் தொடங்குகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக 2010- ஆம் ஆண்டு சிறார்கள் , அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறார்கள் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கோவில் இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு பிறந்த சிறார்கள் தடுப்பூசி போடும் நாள் அன்று 12 வயதை எட்டி இருக்க வேண்டும் எனவும் ஒருவேளை முன்பதிவு செய்தும் 12 வயதை எட்டியிருக்கவில்லை என்றாள் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 முதல் 14 வயது உட்பட்ட சிறார்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசி எடுத்து கொள்ளலாம் எனவும் முதல் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment