தடுப்பூசி ,ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு காரணம் மோசமான திட்டமிடல்!

30283f8e132f416b59927c37c0e81775

தற்போது உலகமெங்கும் பேசும் ஒரே வார்த்தையாக காணப்படுகிறது கொரோனா வைரஸ்.இந்தக் கொரோனா உலகில் உள்ள பல நாட்டு மக்களுக்கு மிகவும் எ கொடுத்து வருகிறது. மேலும் இதற்கு எதிராக பல நாடுகளில் இருந்து பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்தியாவில் இரண்டு விதமான கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன. மேலும் இந்தியாவானது ரஷ்யாவிடமிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி பெற்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

c35c3f8af297f80c932b238b22067d11

 மத்திய அரசின் சார்பில் பல மாநிலங்களுக்கு இந்த தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும் ஒருசில மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மிகவும் தீவிரமாக காணப்படுகிறது. மேலும் கொரோனா  சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகமாக நிலவுகிறது. இதற்காக தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர் இது குறித்து சில கருத்துக்களையும் கூறியுள்ளார்.

அதன்படி மத்திய அரசின் மோசமான திட்டமிடலே கொரோனா தடுப்பூசி  தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட காரணம் சரியான திட்டமிடல் இல்லாததுதான் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மேலும் அவர் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment