Connect with us

நாளை முதல் 6-12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி ; பிரதமர் அறிவிப்பு…

booster

செய்திகள்

நாளை முதல் 6-12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி ; பிரதமர் அறிவிப்பு…

இந்தியாவில் கொரோனா பரவல் மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடம் பிரதமர் ஆலோசனை இன்று  நடத்தினார்.

இதனிடையே பல நாடுக்களை ஒப்பிடும் போடு இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்தி இருந்தாலும், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறினார்.

அதே போல் நாட்டின் 96% நபர்களுக்கு 1 டோஸ் தடுப்பூசியும் 86% நபர்களுக்கு 2- வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் கவலை அளிப்பதாக கூறினார்.

இதனிடையே குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை முதல் அனைவருக்கும் பயன்படுத்தக்கூடிய பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியை 6 முதல் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top