ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமென்றால் தடுப்பூசி கட்டாயம்! மாணவர்கள் நலமே முக்கியம்!!

தொடர்ச்சியாக நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. நம் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாக காணப்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்றம்

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் கல்வி நிறுவனங்களில் கட்டாயத் தடுப்பூசி செலுத்துவது பற்றி எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் கொரோனா  தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கல்வி வள மேம்பாட்டு அறக்கட்டளை என்ற அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொதுநல வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு விசாரித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கில் என்ன பொதுநலன் உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால் மாணவர்கள் நலன் கருதி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். தடுப்பூசி இலவசமாக போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதை நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். மாணவர்கள் நலன் கருதியே தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment