பொதுமக்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு” தடுப்பூசி முன்னுரிமை”!!!

2521495a997876834de879f4e642252c

தற்போது நம் இந்திய திருநாட்டில் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும் தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் கட்டாயம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.fcf8b46ad649a8bfc3e6e22e6f0ba5bf

இதனால் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி குறித்து மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. பொதுமக்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடன்  அன்றாடம் நெருங்கிப் பழகக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்  மன்சுக் மாண்ட்வியா அறிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு பெற்றும் என்றும் அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிவித்துள்ளார்.இதனால் வரும் நாட்களில் பொது மக்களோடு நெருங்கிப் பழகும் வர்த்தகர்கள், அன்றாட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பலரும் தொடர்ச்சியாக தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment