பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி? முதல்வர் ஸ்டாலின் தகவல்!

2c38ada28ab2c660fef62382d4818b8c

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன

இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை நாளுக்கு நாள் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுவதால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடலாமா என மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் ஆனால் இது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 

பள்ளி குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகு தான் பள்ளிகள் திறப்பது சிறந்த முடிவாக இருக்க கூடும் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறிய முதல்வர், தடுப்பூசி முழுமையாகக் கிடைக்காத நிலையில் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment