
செய்திகள்
அட கொடுமையே..!! 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே சிரிஞ்சி மூலம் தடுப்பூசியா ..!!
மத்திய பிரதேசத்தில் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபோது ஒரே சிரஞ்சி பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருக்கும் சாகர் அருகே இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக 9 முதல் 12 வகுப்பு வரையில் இருக்கும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
அப்போது 39 மாணவர்களுக்கு ஒரே சிரஞ்சியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அதே போல் தடுப்பூசி செலுத்தியவர் ஜிதேந்திர அஹிர்வார் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பேசிய அதிகாரிகள் 39 மாணவர்களில் 19 மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மீதமுள்ளவர்களை பரிசோதனை செய்து விரைவில் அறிக்கை வெளியிடுவதாக கூறியுள்ளார். மேலும், தவறுசெய்த அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
