இனி ஜாலியாக இருக்கலாம்; பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை!!
தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் கட்டுப்பாட்டு விதிகளை திரும்பப் பெற்றுக் கொண்டு வருகின்றன.
அதுவும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் இன்று காலை கொரோனா கட்டுப்பாட்டுகளில் சில மாற்றங்கள் பெறப்பட்டுள்ளது.
அதன்படி இனி தடுப்பூசி கட்டாயம் என்பது கிடையாது என்று அறிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் அனைவரும் பொது இடைவெளி மற்றும் முக கவசம் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இவ்வாறுள்ள நிலையில் பொது இடங்களில் தடுப்பு சான்றிதழ் அவசியம் இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் பொது இடங்களுக்கு தடுப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை நீக்கப்பட்டுள்ளது.
92 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி உள்ளதால் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
