Connect with us

நாளை முதல் 200 இடங்களில் தடுப்பூசி முகாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகம்

நாளை முதல் 200 இடங்களில் தடுப்பூசி முகாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

2c38ada28ab2c660fef62382d4818b8c

நாளை முதல் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் 200 தடுப்பூசி மையங்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் வகையில் நாளை முதல் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று என்ற வகையில் 200 தடுப்பூசி மையங்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் தடுப்பூசி மையம் செயல்படும் இடம் குறித்த தகவலை http://covid19chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_center என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அதேபோல் தடுப்பூசி செலுத்த வேண்டிய இடம் மற்றும் நேரம் குறித்து முன்பதிவு செய்துகொள்ள gccvaccine.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது 
மேலும் சென்னையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அதேபோல் 112 கல்லூரிகளில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு அங்கு உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது 

சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இந்த 200 தடுப்பூசி மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top