செய்திகள்
தடுப்பூசி போட்டு கொண்ட இருவர் பலி: அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து நாடுகளும் அரசுகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ஜப்பானில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவர் திடீரென மரணம் அடைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானில் தற்போது மாடர்னா தடுப்பூசியை பலர் செலுத்தி வருகின்றனர் என்பதும் இந்த தடுப்பூசி செய்துகொண்ட பலருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜப்பானில் மாடர்னா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட இருவர் திடீரென உயிரிழந்துள்ளனர். அந்த தடுப்பூசியில் உலோகங்கள் இருந்தது பின்னர் நடந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஜப்பான் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
