Connect with us

தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் செலுத்தாதவர்களாக கருதப்படுவர்: அதிர்ச்சி அறிவிப்பு!

News

தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் செலுத்தாதவர்களாக கருதப்படுவர்: அதிர்ச்சி அறிவிப்பு!

313fd0ae1190896b1d6e1874e6ad4ce7

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாக கருதப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பிரிட்டன் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி இந்திய பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பு ஊசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என புதிய கட்டுப்பாட்டை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

மேலும் அக்டோபர் மாதம் 4அம் தேதி இந்த கட்டுப்பாடு அமலுக்கு வரும் என்றும் எனவே அந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர காத்திருக்கும் இந்திய மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்று அறிவிப்பு ஏன் என்பது குறித்து பிரிட்டன் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top