இனிமேல் இரண்டு மடங்கு வேகத்தில் தடுப்பூசியை செலுத்தியே ஆகவேண்டும்!!!

நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக தடுப்பூசி  போட்டு கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனாலும் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மெகா தடுப்பூசி முகாம்

பொது மக்களுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில சராசரியான 45 சதவீதத்தை விட குறைவான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட மாவட்டங்கள் தங்கள் பணியை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டால் தான் கொரோனா பரவுதலை தடுக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் எட்டு வாரங்களில் 70% என்ற தடுப்பூசி இலக்கை எட்ட வேண்டும் என்று இலக்கு நினைத்துள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

மெகா தடுப்பூசி முகாம்70% இலக்கை எட்டும் வகையில் தடுப்பூசி போடும் வேகத்தை இரட்டிப்பாக்க ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்துதல் செய்துள்ளார். ராணிப்பேட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 36 சதவீதம் பேருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கும், தென்காசி தஞ்சாவூர், புதுக்கோட்டையில் 38 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வேலூர், தர்மபுரியில் 38 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 39 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சேலம், கடலூரில் 40 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 41 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரியலூர், திருச்சி, கிருஷ்ணகிரியில் 45 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவையில் மட்டும் 64 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 63 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநில சராசரியான 45 சதவீத இலக்கை எட்டும் வகையில் பின்தங்கிய மாவட்டங்கள் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த அறிவுறுத்தல்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment