Connect with us

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய மீனாட்சி அம்மனின் 6வித அலங்காரங்கள்…

ஆன்மீகம்

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய மீனாட்சி அம்மனின் 6வித அலங்காரங்கள்…

5a546509b72852e637d9fa1c1e4c2d6a

பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார். சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள். அந்த வரிசையில், மீனாட்சி அம்மன் மொத்தம் 6 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.

சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள். முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்குவர்.

மதுரையில் பல அதிசயங்கள் நடக்கும். அதன்படி, மீனாட்சி அம்மன் தினமும் 8 விதமான சக்திகளாக உருவகப்படுத்தி ஆராதிக்கப்படுகிறாள். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். இனி அந்த 8 வித ஆராதனைகளைப் பற்றிப் பார்ப்போம்

6 – 8 நாழிகை வரையில் புவனேஷ்வரியாகவும்,

12 – 15 நாழிகை வரையில் கௌரியாகவும்,

மதியானத்தில் சியாமளாகவும்,

சாயரட்சையில் மாதங்கியாகவும்,

அர்த்த ஜாமத்தில் பஞ்சதசியாகவும்,

பள்ளியறைக்கு போகையில் ஷோடசியாகவும் அன்னையை உருவகப்படுத்தி ஆராதிக்கப்படுகிறாள்.

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.

4d560797a01696e01c21ea516cad602b-1

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருவாள். அன்னையின் ஒவ்வொரு காட்சியையும் காண கண்கோடி வேண்டும்ம். ஒரேநாளில் இந்த அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது.

30d2c4b580ff8295fbc58433e2368b72

எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் சுவாமி சன்னதியிலிருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி மூக்குத்தி தீபாராதனை நடக்கும். அதன்பின்னரே அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படும். மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சி. பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.

c1a52c56ebde0bf1e064455445f7101c

பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை பலன் தருவாள் என்கின்றனர். வியாபார நஷ்டத்திற்கு தொழில் மற்றும் வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் முன்னேற்றம் பெறலாம் என சொல்கின்றனர்.

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு…

மீனாட்சி அன்னையின் பாதம் பணிவோம்! வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ஆன்மீகம்

To Top