இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
அதே போன்று சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் கோலாகலமாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்த நிலையில் பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகிறது. அதே போல் படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்திருப்பதால் குடும்ப உறுப்பினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வாரிசு படத்தின் டிரைலரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.