ஒரு வழியா முடிவுக்கு வந்த வாரிசு ரிலீஸ் பிரச்சனை! நல்ல செய்தி சொன்ன தயாரிப்பாளர் சங்கம்!

தில் ராஜுவின் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படம் குறித்து மாஸான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இத்திரைப்படம் அதன் படப்பிடிப்பை வேகமாக முடித்து வரும் 2023 ஜனவரியில் பொங்கல் தினத்தன்று வெளியாகும்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ் படம் தான், தெலுங்கில் டப்பிங் செய்து தான் வெளியிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

படத்தில் தமன் இசையமைக்கும் படத்தில் 6 பாடல்கள் உள்ளது , இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது. படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

வாரிசு தமிழ்ப் படம், தெலுங்குப் பதிப்பையும் பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தில் ராஜு. தில் ராஜு நிஜாம் மற்றும் ஆந்திராவில் தியேட்டர்களை முடக்கத் தொடங்கியதை மற்ற தயாரிப்பாளர்கள் விரும்பாததால் பல பிரச்சனைகள் எழுந்தது.

திருமண கொண்டாட்டத்தில் ஜோடியாக கலக்கும் ஹன்சிகா மோத்வானி! கியூட் போட்டோஸ்!

இந்நிலையில் பிரச்சனைகள் தீர்ந்து விஜய்யின் வாரிசு தெலுங்கில் திட்டமிட்டபடி அனைத்து தியேட்டரில் ரிலீசாகும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இந்த தகவல்களால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.