நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு ’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.ராஷ்மிகாவுக்கு இந்த படத்தில் அதிக சுயநலம் கொண்டவராகவும் மற்றும் தலைக்கனம் பிடித்த ஒரு பெண் ரோலில் நடிக்கிறேன் என அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்க பட்ட்தாக கூறப்பட்டது. தற்போது தளபதி விஜய் பாடல் ஒன்றிற்கு ஒரே சாட்டில் நடனமாடும் டான்ஸ் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
அதை தொடர்ந்து படக்குழுக்கு அதிர்ச்சி அளிக்கும் படி அப்படத்தின் ஷூட்டிங் வீடியோ சமீபத்தில் இணையத்தில் கசிந்துள்ளது. அதில் மருத்துவமனனயில் விஜய், சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் முக்கிய காட்சியில் நடிக்கும் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. அதனை மிகவும் அருகில் இருந்து வீடியோ எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருவதால் அப்செட் ஆன இயக்குனர் வம்சி, படக்குழுவுக்கு அதிரடி உத்தரவு போட்டுள்ளார் .
கார்த்தியுடன் கபடி விளையாடும் அதிதி ஷங்கர்! வைரல் வீடியோ!
படப்பிடிப்பின் போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் வீடியோ வெளியாவதை தடுக்க முடியும் என நிலைத்து கொண்டு இந்த உத்தரவை செயல் படுத்துவதாகவும் கூறியுள்ளார்.